இரத்தினபுரி – இறக்குவானை நகரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறக்குவானை – உக்வத்தை பகுதியில் நேற்று முன்தினம் (10) நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்றைய தினம் (12) கிடைக்கப் பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த பி.சி.ஆர் அறிக்கையின் பிரகாரம், நால்வருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இறக்குவானை நகரிலிருந்து கொட்டகவெல செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகளையே தாம் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். (TrueCeylon)