இறக்குவானை – சிங்கராஜ வனப் பகுதி மீண்டும் அழிக்கப்பட்டு வருவதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சிங்கராஜ வனப் பகுதியில் வாழும் மிக அரிய வகையான இரண்டு யானைகளும் கடக்கும் இடங்கள் முள் கம்பிகளினால் மறைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நீர் நிலைகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வனப் பகுதி அழிக்கப்படுவதுடன், மண் அகழ்வு இயந்திரங்களின் ஊடாக தொடர்ச்சியாக காடழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிய கற்களை உடைப்பதற்காக வெடிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதையும் அத தெரண சுட்டிக்காட்டியுள்ளது.
யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது. (ADA DERANA)
Discussion about this post