இறக்குவானையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
இதன்படி, இறுதியாக 4 கொவிட் தொற்றாளர்கள் இறக்குவானை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இறக்குவானையில் இதுவரை 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதேவேளை, இறக்குவானையில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட சிலர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இறக்குவானையில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இன்றைய தினத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடகவெல பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இறக்குவானையிலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)