இரத்தினபுரி – இறக்குவானை நகரிலிருந்து உக்வத்தை வரையான பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு (12) பொலிஸாரினால் நகர் முழுவதும் ஒலி பெருக்கி மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
உக்வத்தை பகுதியில் 4 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இறக்குவானை – குரே கடை சந்தி முதல் உக்வத்தை வரையான பகுதி தற்காலிகமாக முடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த பகுதிகளிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடுமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். (TrueCeylon)
தொடர்புடைய செய்தி
இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?