இலங்கையில் காணப்படுகின்ற இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகம், எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரொமேனியா தூதரகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.