இராணுவ வைத்தியசாலைக்கு வருகைத் தந்து, கொவிட தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் நிராகரித்துள்ள பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இராணுவ வைத்தியசாலைக்கு வருகைத் தந்து தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைகலநாதன், எஸ்.வினோநோதராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நிராகரித்து வருகின்றமை தொடர்பில் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
இராணுவ வைத்தியசாலைக்கு வருகைத் தந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எந்தவொரு இலங்கை பிரஜையும் மறுப்பு தெரிவிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இலங்கை பிரஜை அல்லாதவர்கள் மாத்திரம், தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாது என கூற முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post