மியன்மாரில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தின் மீது பொருளாதார தடையை விதிக்கும் வகையிலான ஆவணமொன்றில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியன்மார் இராணுவத்தின் உயர் அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வர்த்தக தொடர்பாளர்களுக்கு இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள பின்னணியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (BBC NEWS)
Discussion about this post