இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதென சப்ரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவிக்கின்றார்.
நாட்டில் முதலாவது கொரோனா அலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 18 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்ட பின்னணியில், இரண்டாவது கொவிட் அலையினால் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 640 வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எஹலியகொட பகுதியிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எஹலியகொட பகுதியில் இதுவரை 310 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இரத்தினபுரி நகர் எல்லைக்குள் கடந்த 3 தினங்களில் மாத்திரம் 76 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)