இலங்கை : ருவன்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரத்தின் பணிகள் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இரத்தினபுரி நகரின் தெமுவத்த பகுதியில் இந்த இரத்தினக்கல் கோபுரம் நிர்மாணிக்கப்படுகின்றது.
இரண்டு கட்டங்களின் கீழ் இந்த கோபுரத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 3650 லட்சம் ரூபா செலவில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டட தொகுதியொன்று முதல் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இரண்டாவது கட்டத்திற்காக 4500 லட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது கட்டத்தில் 14 மாடிகளை கொண்ட கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தில் வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள், பாதுகாப்பு மத்திய நிலையங்கள், தகவல் நிலையங்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. (TrueCeylon)
Discussion about this post