ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்டம் தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று இன்று (11) நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய, இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ஹசித்த முனாந்திரம் மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இரத்தினபுரி மவுண்ட் கெப் ஹோட்டலில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து, வேறு கட்சிகளுக்கு சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துக்கொள்ளாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக இன்றைய சந்திப்பின் போது கருத்துரைக்கப்பட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடலில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post