கொழும்பு மாவட்டம்.
01. இன்றைய தினம் (21) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகள்.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா பகுதி.
02.தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் பகுதிகள்.
முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகள்.
கொம்பனிவீதியின் செகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பொரள்ளையின் வனாதாமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெல்லம்பிட்டியில் லக்சந்த சேவன வீடமைப்பு திட்டம் மற்றும் மட்டக்குளியில் ஃபேர்கஷன் வீதியின் தென் பகுதி ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கொம்பனிவீதியின் ஹுனுபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60ஆவது தோட்டம், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் மயூரா பிரதேசம் மற்றும் நஷில் தோட்டம், மிரிஹான பொலிஸ் பிரிவின் தெமலவத்த ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பகுதிகள்.
வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவின் நயிதுவ பிரதேசம், பேலியகொட பொலிஸ் பிரிவின் கங்கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகளின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டன.
தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ள பகுதிகளின் விபரங்கள்.
வத்தளை பொலிஸ் பிரிவின் வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்த, மீகஹவத்தை, பட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் ஹுனுபிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் வெலிகந்த பகுதியும், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் எம்.சீ வீடமைப்பு திட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் திஹாரி வடக்கு, திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி, ஹித்ரா மாவத்தை ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வெயங்கொட பொலிஸ் பிரிவின் ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொட கங்கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தெல்லிகஹவத்தை பகுதியும், பூரண கொட்டுவத்த பகுதியும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஸ்ரீ ஜயந்தி மாவத்தை புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. (TrueCeylon)