நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம், இறுதியாக கொவிட் தொற்றுக்குள்ளான மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இலங்கையில் உயிரிழந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 194ஆக அதிகரித்துள்ளது.
களுத்துறை – தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 24ம் திகதி அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இருத்த அழுத்தம், இருதய நோய், இரத்தம் நஞ்சாதல் உள்ளிட்ட நோய்களுடன் கொவிட் தொற்று ஏற்பட்டமையே உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கண்டி – தெல்தெனிய பகுதியில் 83 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலையிலிருந்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட் நியூமோனியா நிலைமையே, உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
களுத்துறை தென் பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண்ணொருவர், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 22ம் திகதி அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுடன், இரத்தம் விஷமாகியமை உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)