காலி துறைமுகத்திற்கு வருகைத் தந்த கப்பலொன்றிலிருந்து பொருட்களை இறக்கும் பணிகளில் ஈடுபட்ட 14 இந்திய பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய பிரஜைகள் சுமார் ஒரு வருட காலமாக இலங்கையில் தங்கியிருந்து கடமையாற்றிய வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கப்பலிலுள்ள பொருட்கள் தரையிறக்கப்பட்டதை அடுத்து குறித்த கப்பல் காலி துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் பரிந்துரையின் பேரில் குறித்த 14 இந்திய பிரஜைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கப்பலில் பணியாற்றும் எவரேனும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தால், அது குறித்த இந்திய பிரஜைகளை பாதித்திருக்குமா என்ற எண்ணத்திலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மக்குளுவாவ பகுதியிலுள்ள வீடொன்றில் கடற்படையினர் கண்காணிப்பில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.