கொழும்பு : கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்காக இந்தியாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று (06) காலை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்தியாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி, இதன்போது தனது இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கொவிட் தொற்றினால் வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post