இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் நெருங்கிய தொடர்புகள் யாரும் இலங்கையில் கிடையாது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றமையினால், இலங்கையர்களுக்கு இந்த வைரஸின் ஊடாக தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் தற்போதைய நிலையில் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்திலிருந்து நாட்டிற்குள் இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்பட்டமையினாலேயே, அங்கிருந்து வருகைத் தரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வைரஸ் பரவிய காலப் பகுதியில் இங்கிலாந்திலிருந்து சிலர் வருகைத் தந்துள்ள போதிலும், குறித்த கிரிக்கெட் வீரர் மாத்திரமே அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
இந்த வீரர் இலங்கையிலுள்ள எந்தவொரு தரப்புடனும் தொடர்;புகளை வைத்திருக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
அதனால் குறித்த வைரஸ் சமூகத்திற்குள் பரவவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post