இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கே புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தாக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொவிட் வைரஸ், இலங்கையில் பரவியதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கே இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், பிரித்தானிய கிரிக்கெட் அணியின் எந்த வீரருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் தனக்கு தெரியாது என சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார். (TrueCeylon)
Discussion about this post