இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கியிருந்த காலி – தடல்லே பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலின் இரு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோட்டலிற்குள் கடமையாற்றும் இருவருக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரத்கம – கபுமுல்ல மற்றும் வெலிகம – வெல்லிவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிடுகின்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்களுக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாகவே இருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post