இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வரும் விமானங்கள் இன்றிரவுக்குப் பிறகு நிறுத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாளை அதிகாலை 2.00 மணி முதல் தடைவிதிப்பு அமுலுக்கு வரும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வைரஸ் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இத்தடை நீக்கப்படும் திகதி தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக நேற்று முதல் 40 நாடுகள் வரை இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.(Trueceylon)