ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சாதாரண நோய்களுக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதென அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், விசேட திட்டத்தின் கீழ் தற்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் உதார அத்தபத்து தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் திரும்ப வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post