ஐந்து மாதங்களுக்கு பின்னர், முதற் தடவையாக அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரத்திற்கு சர்வதேச விமானமொன்று தரையிறக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூஎல்-604 என்ற விமானமே இவ்வாறு இன்று அவுஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் கொவிட் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சர்வதேச பயணிகள் விமானமொன்று தரையிறக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஜுலை மாதம் 10ம் திகதிக்கு பின்னர், மெல்போன் நகரில் தரையிறக்கப்பட்ட முதலாவது சர்வதேச பயணிகள் விமானமாக ஸ்ரீலங்கன் விமானம் விளங்குகின்றது.