இலங்கை : அவிசாவளை மற்றும் யட்டியாந்தோட்டை பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் கடந்த இரு தினங்களில் நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அவிசாவளை – தெய்யோவிட்ட – தெம்பிலியான பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 26 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, யட்டியாந்தோட்டை – புளத்கொஹ{பிட்டிய பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கார் ஒன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த 24 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யட்டியாந்தோட்டை – கலனி பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ராமநாதன் திலீபன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான மகேந்திரன் மயூரன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர் (TrueCeylon)
Discussion about this post