உலகின் மிக பெரிய நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு அதிகமான காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அமைப்புக்கள், ஜாக் மாவுக்கு சொந்தமான நிறுவனங்களின் மீது விசாரணைகளை நடத்தி வரும் பின்னணியிலேயே, அவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொலைக்காட்சியொன்றில் பல மாதங்களாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் நடுவராக பங்கேற்ற ஜாக் மா, அந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் கூட கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய கண்டத்தில் 5ஆவது பெரிய பணக்கார நிறுவனமாக அலிபாபா நிறுவனம் திகழ்கின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற ஒரு நிதி தொழில்நுட்ப மாநாட்டில், சீன வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாகவும், அதனால் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னரே அவர் பொதுவெளியில் காணப்படவில்லை எனவும் ராயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மோதலின் பின்னரான காலத்தில் அலிபாபாவின் ஆன்ட் குழுமத்தின் 37 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆரம்ப பொது விடுப்புக்கள் சீனாவினால் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான சர்ச்சைகளின் பின்னரே, ஜாக் மா காணாமல் போயுள்ளமை, பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜாக் மா காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)
Discussion about this post