இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் பயணிக்கும் பயணிகளுக்காக கொவிட் பாதுகாப்பு நிதியமொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விநியோகிக்கப்படும் அனைத்து டிக்கட்களிலும் இருந்து, ஒரு ரூபாய், கொவிட் பாதுகாப்பு நிதியத்திற்கு ஒதுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவிக்கின்றார்.
இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிக்கும் போது, ஏதேனும் ஒரு வகையில் கொவிட் தொற்று பரவுமேயானால், குறித்த தொற்றாளருக்கு நட்டஈடு வழங்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.