ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2021ம் ஆண்டு மற்றுமொரு கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
”லங்கா ரி10 சூப்பர் லீக்” கிரிக்கெட் சுற்றுத் தொடரொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
வெளிநாட்டு வீரர்களின் பங்குப்பற்றுதலுடன் இந்த கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை – இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பின்னர், லங்கா ரி10 சூப்பர் லீக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
10 ஓவர்கள் என்ற அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரை இந்த போட்டிகளை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
8 அணிகள் இந்த போட்டியில் பங்குப்பற்றவுள்ளன.
ஒரு அணியில் ஆகக்கூடியதாக 6 வெளிநாட்டு வீரர்களை இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச மைதானம் மற்றும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானம் ஆகியவற்றில் இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. (TrueCeylon)