நடிகர் அஜித் குமார் ஒரு கோடியே 25 லட்சம் ரூபா நிதியுதவியை கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் நிவாரண நிதிக்காக 50 லட்சம் ரூபாவும், முதல்வர் நிவாரண நிதிக்காக 50 லட்சம் ரூபாவும், ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாவுமாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அஜித் குமாரின் இந்த உதவி தொடர்பில் அவரது ரசிகர்கள் தமது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.