மேல் மாகாணத்தில் அதிக கொவிட் அச்சுறுத்தல் மிக்க பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, இன்று முதல் பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசி, இதுவரை காலமும் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் என தெரிவு செய்யப்பட்ட தரப்பிற்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அச்சுறுத்தலான பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கும் வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.(TrueCeylon)
Discussion about this post