திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நிழலுலக தலைவரான அங்கொட லொக்காவின் சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கொட பகுதியில் வைத்து இரு துப்பாக்கிகள் மற்றும் 18 துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடி படையினர் நடத்திய சுற்றி வளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
37 வயதான சுமித்ரா ஆராச்சி தோன் உதார நெரன்ஜன் என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். (TrueCeylon)