இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேரா என்ற நபரின் உயிரிழப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அவரது உறவினர்களின் DNA மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரின் DNA மாதிரிகளை அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
அங்கொட லொக்காவின் உயிரிழப்பை உறுதி செய்துக்கொள்ளும் நோக்கிலேயே, அவரது உறவினர்களின் DNA பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அங்கொட லொக்காவின் உயிரிழப்பை உறுதி செய்துக்கொள்வதற்காக, அவரது உறவினர்களின் DNA மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை, குற்றப் புலனாய்வு திணைக்களம் களுத்துறை நீதிமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோரியிருந்தது.
இந்த நிலையில், நீதவான் அதற்கான உத்தரவை வழங்கியிருந்தார். (TrueCeylon)
Discussion about this post