இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு சரியானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அகில தனஞ்சயவிற்கு விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அகில தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பிலான காணொளியை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடந்த 22ம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பியுள்ளது.
குறித்த காணொளி தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்பு தேர்ச்சி பெற்றோர் ஆராய்ந்துள்ளனர்.
அகில தனஞ்சயவின் பந்து வீச்சு ஏற்றுக்கொள்ளக்கூடியது எனவும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்பு தேர்ச்சி பெற்ற குழுவினர் தீர்மானித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post